Showing posts with label கடவுளுகாகக் காத்திருக்கிறேன். Show all posts
Showing posts with label கடவுளுகாகக் காத்திருக்கிறேன். Show all posts

Thursday, November 11, 2010

கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்


தோழியின் மீது காதல் !
தொலைந்து போனது 
தாய்மொழி வார்த்தைகள் !

தொலைவில் அவள் 
சென்றிடக்கூடுமென்று  
மறைந்தே கிடக்கிறது 
மனதிற்குள் அன்பு !

 சொன்னால் விதி  
என்ன ஆகும் ? 
சொல்லாமல் என் அன்பு 
எங்கு போகும் ?

ஒளித்து வைப்பதும் குற்றம் ! 
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் ! 
எங்கு தான் போகும் 
அனாதையான அன்பு ?

யாரேனும் கடவுளைப் பார்த்தால் 
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக் 
கேள்வி கேட்கவேண்டும்!