Showing posts with label ன் நாய் வாங்கிய ரகசியம். Show all posts
Showing posts with label ன் நாய் வாங்கிய ரகசியம். Show all posts

Sunday, May 30, 2010

நாய் வாங்கிய ரகசியம்

தேதி எல்லாம் தெரியவில்லை
தெரிந்தது இதுதான் !
அது ஒரு மாலை நேரம் !

மழை மேகமெல்லாம் ஒன்றுமில்லை !
அனல் வெயில் கொஞ்சம்.!

நடக்கிறாயோ? தவழ்கிறாயோ ?
ஒரே வியப்பு.!
அப்படித்தான் கானல் நீர் போல்
பட்டும் படாமலும் தரையில் கால்பதித்து
நடந்து சென்றாய் என் கண் முன்!

வழியில் குறுக்கிட்ட
நாய்க்குட்டியைப் பார்த்ததும் மனதில்
ஒளித்து வைத்திருந்த பயத்தையெல்லாம்
அவிழ்த்து  விடுகிறாய் ஒரே அடியாய்!

நொடி ஒன்றும் தாமதிக்கவில்லை !
ஓடி வந்து என் பின் ஒளிந்து கொண்டாய்!

உன் இரு கைகளும் என் அஞ்சு விரல்களில் 
தஞ்சம் கொண்டு விட்டது  .!
(வந்தது நாயல்ல அழகி !
நான் வணங்கும் சாமி தான் அது!)

நாட்கள் கொஞ்சம் போனது!
உன் வீட்டில் நீ இருந்த நேரம் போய்
இன்று  நம் வீட்டில் நாம் இருக்கிறோம்!
ஆம்!

காதலித்துக் கொஞ்சியது பத்தாமல்
கைபிடித்துக் கூட்டியே வந்து விட்டேன் !
உன்னை என் மனைவியாய்!

வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் நான்  
உனக்கு பிடித்தவைகளாய்
மாற்றிக்கொண்டிருந்த நேரம் அது!

ஒன்றே ஒன்றை மட்டும் உனக்குப்
பிடிக்காதென்று தெரிந்திருந்தும்
வேண்டுமென்றே செய்தேன்!

தொலைபேசி விளம்பரம் என் ஆசையை 
நாய்குட்டியிடம் கூட்டி சென்றது !
கரடி மாதிரி ஒரு நாய் வாங்கி வந்து
வீட்டு வாசலில் கட்டி வைத்தேன்!!

அன்று முதல்,
உனக்கு பிடிக்காத விஷயங்களில்
நாயுடன் நானும் சேர்ந்து கொண்டேன் !

ஒரு வாரத்துக்கு பின்
நிலைமை பழமைக்கு மாறிவிட்டது !

ஒவ்வொரு முறை நீ
வாசற்படியைக் கடக்கும் போதும்
குறைத்து தள்ளுகிற நாய்குட்டிக்கு பயந்து
என் நெஞ்சில் வந்து
சாய்ந்து கொள்கிறாய் நீ !

இப்போது புரிந்திருக்குமே !
நான் நாய் வாங்கிய ரகசியம்..??!!!!!