Showing posts with label I wish i could be you. Show all posts
Showing posts with label I wish i could be you. Show all posts

Thursday, April 5, 2012

இப்படி இருந்திருக்கலாம்....

கண்காணா 
தூர தேசத்தில்

ஆளரவமில்லாத 
அடர்க்காட்டில்

விண்ணின்று 
கொட்டும்
அருவியின்  
வழியில்
  
பாறையில் 
பட்டுத் தெறித்த 
கொஞ்சம் 
நீர்த்துளியால்

உயிர்பெற்று 
வளர்ந்த 
பூக்களின்  
இதழ்களுக்குள்  

ஒளிந்து 
கொண்டிருக்கும் 
ரெட்டைத் 
தேனீக்களாய் 
நாம் 
பிறந்திருக்கலாம்....!!

நம் மதம் 
புன்னகையாகவும்

நம் சாதி
ஈக்களாகவும்

நம் சொந்தங்கள்
பூக்களாகவும் 
இருந்திருப்பார்கள் !

நாமும் யார் 
எதிர்ப்பும் இன்றி 
சேர்ந்தே
வாழ்ந்திருந்திருக்கலாம்!  
  

Wednesday, March 21, 2012

இப்படியெல்லாம் இருந்திருக்கலாம் - பகுதி ஒன்று


# 01
நாள் முழுதும் உன் உள்ளங்கை மழையில் நனைந்துகொண்டிருக்கும் கைக்குட்டை நானாக இருந்திருக்கலாம் 
# 02
நீ கோபப்படும் போது உன் மூக்கின் மேல் முத்தமிட்டு சிரித்துக் கொண்டிருக்கும்  நாலு சொட்டு வியர்வைத் துளியாய் நான் இருந்திருக்கலாம் !
#03
உன் நாடித்துடிப்பை கட்டியணைக்கும் குட்டிக் கடிகாரம் நானாக இருந்திருக்கலாம் !
#04
யாருமில்லா பொழுதுகளில் நீ சிரித்துப் பார்த்தும் முறைத்துப் பார்த்தும் மகிழ்கிற நிலைக்கண்ணாடி நானாக இருந்திருக்கலாம் !
 #05
கழுத்தின் வழியாக நெஞ்சை கடந்து வயிற்றில் படுத்திருக்கும் 
சர்ப்பக் கூந்தல் நானாக இருந்திருக்கலாம் ! அது அழகு !


#06
சர்ப்பத்தை சூழ்ந்திருக்கும் மொட்டு மல்லிகைக் கூட்டம் நானாக இருந்திருக்கலாம் !
#07
புத்தகப்பை இல்லாத நேரத்தில் உன் நெஞ்சோடு அணைக்கப்பட்டு சுமந்து போகும் புத்தகங்கள் நானாக இருந்திருக்கலாம் !
#08
நான்தான் இவள் கைகளை முத்தமிடவேண்டுமென்று சமயத்தில் சப்தமிட்டு  சண்டையிட்டுக் கொள்ளும் ஐந்து வலைகளும் நானும் ஒன்றாய் இருந்திருக்கலாம் !
#09
வைரங்களாலும் வைடூரியங்களாலும் ஆன ஊர்களை இணைக்கிற தங்கத் தொடர்வண்டி உன் கழுத்துக்கு நானாக இருந்திருக்கலாம் !
 #10
நீ முதன் முதலில் கட்டிய சேலையில் உன்னை தொட்டுரசிய நூல்கள் எல்லாம் நானாக இருந்திருக்கலாம் !
 #11
வெறும் மல்லிகையோடு இல்லாமல் ஒரு ஆரஞ்சு ரோஜாவும் வைத்தால் ரொம்ப அழகாக இருக்கும் என்று சொல்லுகிற உன் மனநிலை நானாக இருந்திருக்கலாம் !
#12
பன்னிரு  நரம்புகள் சங்கமிக்கிற நடுநெற்றியில் உன் செந்நிற குங்குமம் நானாக இருந்திருக்கலாம் !
 #13
உன் கைகளை விட்டுவிட்டால் நீ சிவந்து போகிறாய் . உன் கைகளை கட்டி அணைக்கிற மருதாணியாக நான் இருந்திருக்கலாம் !
 #14
வெளுத்துப் போயும் "இது சாமிக் கயிறு " என்று காலம் காலமாக உன் மணிக்கட்டை ஆக்கிரமிக்கும் ரெட்டை சுற்றுக் கயிறாய் நான் இருந்திருக்கலாம் !
 #15
உன் கைபேசித் தொடு திரையில் கன்னத்தில் கைவைத்து சிரித்துக் கொண்டிருக்கும் குட்டிக் குழந்தை நானாக இருந்திருக்கலாம் ! 
 #16
 நீ வெட்கத்தில் கைகளால் கண்களை மூடிக் கொள்ளும் போது , உன் கண்களுக்கும் கைவிரல்களுக்கும் இடையில் ஒளிந்துகொண்டு உன் அழகை ரசிக்கிற கறுப்புக் காற்றாய் நான் இருந்திருக்கலாம் !
 #17
வெகு நேரத்திற்குப் பின் கலையத் தொடங்கும் உன் முதல் முடிக்கீற்று நானாக இருந்திருக்கலாம் ! அது அழகு ! 
  #18
உன்னைக் கடித்துவிட்டு ஒளிந்துகொள்கிற சிற்றெறும்பாகவோ 
இல்லை கிச்சுகிச்சு மூட்டியதர்க்காக நீ மன்னித்து தரையில் இறக்கிவிடப் படுகிற சாமி எறும்பாகவோ நான் இருந்திருக்கலாம் ! 
 #19 
உன் சிரிப்பிலிருந்து சிதறி விழும் நட்ச்சத்திர துகள்கள் அத்தனையும் நானாக இருந்திருக்கலாம் !

#20 
நீ தூக்கிவைத்துக் கொஞ்சிகொண்டிருக்கும் பெயர் தெரியாத ஏதாவதொரு அழகுக் குழந்தையாக இருந்திருக்கலாம் !

Tuesday, March 6, 2012

அன்புள்ள அஃறிணைகள்


உயிரில்லா அஃறிணைகள் 
ஏன் இப்போழ்தெல்லாம்   
என் உயிரெடுக்கும் 
தொழிலை செய்து 
கொண்டிருக்கிறதோ 
தெரியவில்லை -உன் 

மின்னல் மூக்குத்தியாகட்டும்
கம்மல் தோடுகளாகட்டும்
கால்களின் கொலுசாகட்டும்
கைவளையாகட்டும் 
எதுவோ என்னமோ 

அத்தனையும் உன் அழகிற்கு 
அழகு சேர்க்கையில் 
ஏக கோபத்திலும் 
ஏக்கமாய் ஒரு ஆசையிலும்
மிதக்கிறேன் !

அவைகள் அத்தனையும் 
  நானாகவே  இருந்திருந்தால்
ஃறிணைகள் எல்லாம் 
 எத்தனை அழகென்று 
எழுதியிருப்பேன் ?

இருந்தாலும் சொல்கிறேன்
ஃறிணைகள் எல்லாம்  
சத்தியமாய் அழகுதான்
அது உன்னுடம்பை 
  தொட்டு நிற்கும் 
வரம் கிடைக்கும் 
போது மட்டும் ! 


Anklets , ear rings , nose screws ,
 & whatever the non living
ornaments are ...
They make me  jealous by all means , 
for they enrich you  24 /7 , 
No matter what color,size,
Or whatever their attributes are .


I  Wish i could be those things which 
touches your rosewood sweet skin !


Yet, i would declare them to be 
The most precious things in this world 
One and only when they are 
Destined to decorate your 
very own body theme !