Friday, September 7, 2012

ஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்


நான் யார்
எனக்
கேட்பவர்கள்
எல்லோரும்,
நீ யார் என
முதலில்
தெரிந்து
கொள்கிறார்கள்
அழகி !

# You are the Benevolent Source, 
from where My own Identity Starts


ஒருநிலையாய்
என்னை
வாழவைக்கும்
தத்துவங்கள்
எல்லாம்
உன் அன்பிலிருந்து
நான் பொறுக்கி
எடுத்து வைத்துக்
கொண்டவை !
அழகி
நான் அலைபேசியில்
பாடிக்கொண்டிருந்த 
ராத்திரியை
ஒருவழியாக
உன்வீட்டு
நாய் கர்ஜித்து
முடித்துவைத்துவிட்டது!
 


தூங்கப் போகும் முன்
ஒரு கவிதையும்
நூறு முத்தமும்
வேண்டுமென்கிறாய்...
ஒரே கவிதையில்
நூறு முத்தம்
கொடுத்தனுப்புகிறேன் !
வேறென்ன செய்ய ?

Distant factor dominates ME, and all I can do is.. 
Just write out few lines and send some how-much-I-Love-you stuffs 
to you and feel happy inside. . . 
Missing you !

 
உன் ஒவ்வொரு
குட் நைட்
ஸ்வீட் ட்ரீம்ஸ்
டேக் கேரும்,
ஒரு பெரிய
பிரிவுக்கு
தினமும் ராத்திரி
ஒத்திகை
பார்ப்பதைப்
போலிருக்கிறது

I Could not defy your non-presence with me , 
even for a single Stupid Night !
 
சப்தமிட்டு
சண்டை
பிடிக்கிறாய்
முத்தமிட்டு
நானதை
முடித்து
வைக்கிறேன் !
 
நீயும்
தமிழும்
முகம்பார்த்துப்
பேசிக் கொள்கையில்...
கேட்டுக்கொண்டே
குனிந்துகொண்டு
நான்
எதை எழுதினாலும்
அது கவிதை !
 
ஒளிரும்
மெழுகுவர்த்தியின்
ஒளியில்
உன் கண்களும்
என் கண்களும்
காற்றில்
முத்தமிடுவதைப்
பார்த்த
நட்சத்திரங்கள்...
நிலவை
மேகங்களுக்குள்
கூட்டிச்சென்று
நூறுமுத்தம்
கொடுத்துத்
திருப்பி
அனுப்புகிறது !
பாரேன்...
நம்மைப்
பார்த்துத் தான்
நட்சத்திரங்களும்
காதலித்துக்
கொண்டிருக்கிறது !
அழகி

நூறு நிமிடம்
நீ என்னை
நினைத்திருந்தால்
அதை ஒரு
நிமிடத்தில் எழுதி
ஒரே ஒரு கவிதை
உன்னிடம் தருகிறேன் ...
அதைப் படித்துவிட்டு
நாள் முழுதும்

என்னையே
நினைத்துக்
கொண்டிருக்கிறாய் ...
இப்படியே நீ செய்து
கொண்டிருந்தால்
வருடம் முழுதும்
நான் கவிதை
மட்டும் தான்
எழுத வேண்டி
இருக்கும் !
காதல் மட்டும் தான்
செய்ய வேண்டி
இருக்கும் !
பார்த்துக்கொள்

நீ கவிதை
கேட்டால்...
நிலவிற்கு
மேலேறி
நெடுநேரம்
யோசித்துவிட்டு
அங்கிருந்து
உன்னைக்
கைகாட்டுகிறேன் !!
நிழலின்
பிம்பங்களுக்குள்
ஒளிந்திருக்கிற
உன்னை,
அவ்வளவு
சுலபமாய்
யாரும்
திருடிவிட
முடியாது...

நிஜத்தின் உச்சமாய்
அதற்குள்
ஒளிந்திருக்கும்
என்னைத் தவிர !

--பிரபாகரன் சேரவஞ்சி
 
ரசிக்கத்
தெரியாதவள்
கண்ணில்
என் வார்த்தைகள்
பட்டால் என்ன
படாவிட்டால் என்ன?
நீ படி
நீ சிரி
நீ ரசி

நீ காதலி
அது போதும் !

 ♥
மாதத்தின்
ரெண்டாம்
பௌர்ணமி
இன்று !
இதுவே
அதிசயமாம்...
வருடமெல்லாம்
ஒளிரும்
பௌர்ணமி நீ !
என் நெஞ்செங்கும்
நிறைந்துகிடக்கும்
வெண்ணிறப்
பேரதிசயம் !!

ஊருலகம்
என்மேல்
கண்டுபிடிக்கும்
குறைகள்
எல்லாம்
உனக்கு மட்டும்
அழகாய்த்
தெரிவதில்
வாழ்கிறது
நம் காதல் !
சிலநேரம்
இருள்சூழ்
மௌனக்
கதவுகளுக்குள்
அடைந்து
கிடப்பேன் !
அப்போதெல்லாம்
என்னைத்
தட்டித் திறக்க
ஒற்றை மணி
ஓசை போலிருக்கும்..
உன் குரலுக்கு
மட்டும் தான்
அனுமதி உண்டு !

கைப்பிடித்துத்
தோள்களுரசி
கொஞ்சமும்
விலகாமல்
கொஞ்சிக்
கொஞ்சிக்
கூடவே வருகிறாய் ..
ஏ...நிழலுக்குள்
படர்ந்திருக்கும்

நிஜமே..
நித்தியத்
தனிமையே ,
நீ என்னை
விட்டு
விலகுவதுமில்லை,
என்னைக்
கைவிடுவதுமில்லை !

# In Love with Loneliness !

நிமிடத்திற்கு
நூறு கவிதை
அளக்கும் அளவு
என்னிடம்
காதல் இல்லை..
ஆனால்
நொடிக்குக் கோடி
முறையாவது
உன்னை

நினைக்கும்
காதல் இருக்கிறது
என்னிடம்..
அது மட்டும்
சத்தியம் !

மாதா
பிதா
குரு
நீ !
 

அவனிக்குள்
என் அவனி -
அவள் நீ !
அன்பையும்
அழகையும்
கொட்டி
செய்த
அற்புத
சண்பணி
நீ !

நீ பூ வைக்கிற
நாளில் மட்டும்
செத்துப் போய்,
பூவாய்ப் பிறந்து,
ஒருநாள் உன்
சிகைக் கோவிலில்
வசித்துவிட்டு,
வாடிப் போய்
வீழ்ந்தெழுந்து,

மனிதனாய்ப்
பிறந்து மறுபடி
உன்முன் நிற்க
ஆசை !

# Then You ll Ask...ஆமா நேத்து நீ எங்க போன ?

நீ சிரிக்கிறாய்...
நீ வாழவைக்கிறாயா ?
சாகவைக்கிறாயா ?
எதுவோ என்னவோ
It Enthralls me 
 ♥ !
 

Pic Courtesy : Sowmya Photography.Com

நீயாய்
மாறின
உயிரணுக்களை
எல்லாம்
நிலவுக்கு
அனுப்பி
குளிரூட்டினாலோ
உன் தாய் ?

 
வேறொருவரின்
நூறு வண்ணம்
வேண்டாம்
நீ தொட்டு
நான்கு
வர்ணம் பூசு,
காலம் கடந்து
என் காதல்
மின்னும் !

Penned By :

பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha)

 

13 comments:

  1. ஐயா.....சாமி....ஒரே முத்த வெக்கை...ஆறட்டும் வரேன் !

    ReplyDelete
  2. ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

    ReplyDelete
  3. காதல் ரசம் பொழியும் வரிகளும் உணர்வுகளும்... நல்ல படைப்பு

    ReplyDelete
  4. அத்தனையும் அழகு...
    உன் வார்த்தை முத்தங்களில் கன்னங்கள் சிவக்க காதலும் வெட்கி தலை சாய்கிறது சகோ...

    ReplyDelete