Showing posts with label அன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ். Show all posts
Showing posts with label அன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ். Show all posts

Sunday, August 29, 2010

அன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ்

பிறவிப்பயனை பெறாமல் நோகும்   
என் ஆட்காட்டி விரலில் - சுட்டி 

அழகி இவள்தான் ,
என் அழகி இவள் தான் என்று 

கேட்கிற அனைவரிடமும் 
சொல்லி மகிழ வேண்டும் 
போல இருக்கிறது ..

ஆனால் உன்
அன்புக்கட்டளைக்குள் 
அடைபட்டுக் கிடக்கிறேனே
அழகி .,

ஏன் ? நீ என் ' பொண்டாட்டி ' 
என்பதைத் தவிர 
வேறு எதையும் யாரிடமும் 
சொல்ல வேண்டாம்
என்று தடுக்கிறாய் ?

ப்ச்ச்ச் ....!!! போடி  .!

 ஒன்று மட்டும் நிச்சயம் அழகி !

இயற்கையின் அழகிற்கு ...
 நம் காதல் - 
ஒரு முன்னேற்ற மயில்கல்.!

ஊருக்கு சொல்லமுடியாமற் போன   
நம் அன்பின் உன்னதமோ 
இயற்கையின் அழகை 
குறுக்கிட்டு மறிக்கும் 
 மதில்சுவர் தடங்கல் ..!!