Monday, July 11, 2011

எது காதல் ?

அரங்கேற்றம் தொடங்கட்டும் !
ஓடிப்போய் நீ எங்கோ ஒளிந்துகொள் !
உனக்கெதிரில் நானெங்கோ
ஒளிந்து கொள்கிறேன் !

என்னைக் கண்டுபிடித்தால்
நீயும் சொல்லவேண்டாம் !
உன்னைக் கண்டுபிடித்தால்
நானும் சொல்லிடமாட்டேன் !

ஞாபகம் வைத்துக் கண்டுபிடித்து
விளையாடிக் கொண்டிருந்தது ஊர் !
நாமோ கண்டுபிடித்து மறந்து
விளையாட வேண்டிய நிலைமை !

பொல்லாத காதல் விளையாட்டில் 
பொழுது சாய்ந்தால் ஒரு விதி 
விழித்து எழுந்தால் ஒரு விதியா ? !
எவன்தான் செய்கிறான்
காதலர்களுக்கு இப்படி விதி ?

நேற்று, பொழுதுக்கும் என் பெயரை
காற்றில் வாசித்தவள் !
இன்று கற்பனையில் கூட வாசிக்காமல்
போன வழி எங்கே ?

எத்தனையோ அன்பினை படித்து முடித்து
எது காதலென்று மறந்து
போகும் நிலைக்குப் பெயர் தான்
ஒருவேளை காதலில் டாக்டர் பட்டமோ !?

Friday, May 20, 2011

நேற்றடித்த மழையில்...


நேற்றடித்த ஆசைமழையில் 
 இன்றெழுந்த எல்லாம் காதலாம் !
பார்க்க முடிகிற அன்பிலும் 
கேட்க நேர்கிற காதலிலும் 
உணர முடிகிற உண்மைகள் யாவிலும்
உடல்களின்  வாசமே
உண்மைப் பிரதானம் !
அது காதலாம்! 
ஓஹோ !

அப்படியானால் இதற்குப் பெயர் என்ன ? 
கனவில் விதி எழுதி ,
நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான் எங்கோ 
சென்றுவிட்ட போதும் ,
காற்றில் அன்பெழுதி 
சப்தமிட்டு வாசிக்கிறேன் !
அதைநீ  முத்தமிட்டு நேசிக்கிறாய் !

தோள் இல்லை - நான் 
சாய்ந்துகொண்டுதா  னிருக்கிறேன்-உன் 
மடியில்லை - நான் 
தூங்கிக் கொண்டுதா னிருக்கிறேன் ! 

விதியை மீறி விண்ணை எட்டிய 
நம் உணர்வுகள் இன்று !
நட்சத்திரங்களுக்கு நடுவினில்
உலவிக் கொண்டிருக்கும் காற்றோடு 
கைகோர்த்து காதலித்துக் கொண்டிருக்கிறது !

இதை விட ஒரு பெரிய காதலை
நான் பார்த்ததில்லை அழகி !

Thanx, that you are here to accredit my love ! 
Love you so much !

Monday, February 28, 2011

காதல் 25 - The Refined Definitions

பூக்களின் நடுவினில் பயணம் போகிறேன் !
உன் புன்னகை நிறம் மஞ்சலென உணர்கிறேன் !
இது காதல் !




* நாம் கட்டியணைத்துக்  கொள்ளும் போது,
இடையினில் நிறைந்திருக்கும்
அத்தனைக் காற்றிற்குள்ளும்
ஒளிந்திருப்பது காதல் !
ஒளித்து வைத்தது நாம்!



  இரு வேறு தீச்சுடரின் கோபம் - காதல் !
ஒன்றும் இன்னொன்றும் எரிகிற வேலையில்
பளிச்சிடும் ஒளியில்
மிளிர்வது காதல் !
 

நீ ஏமாந்திருக்கும் வேலையில் உன்
பின்னின்று
உச்சந்தலையில்
முத்தமிடுவது காதல்!


* உன்னை சுவாசித்து
என்னை வெளியேற்றும்
செயல் காதல் !


* என்னைப் பிடிக்குமா என்று நீ
கேள்வி கேட்பது காதல் ,
"பிடிக்கவே பிடிக்காது" என்று நான்
பதில் சொல்வது
காதலோ காதல் !


* ஊருக்கு நாம் எப்படியோ ?
உனக்கு நான் அழகு !
எனக்கு நீ அழகோ அழகு !
இது காதல் !


கவிதை எழுதத் தெரியாதவன்
எழுதிக் கிழிக்கும்
அத்தனை காகிதங்களுகுள்ளும்
எத்தனையோ காதல்
செத்துக் கிடக்கிறது !
உண்மை எதுவோ .,
அதை சொல்ல முடியாத
வார்த்தைகளில் ஒளிந்திருப்பது
காதல் !



என்னைப் பிரிவதற்கு நீ போட்ட
அத்தனை  நாடகங்களிலும்
கதாநாயகியை காமெடியன் வென்றான் !
அது நான் !
அது காதல் !


நான் உன் அளவிற்கு அழகில்லை
என்று புலம்புவது காதல் !
" சோ வாட்" என்று நீ
சூப்பராய் பதில் சொல்வது 
காதலோ காதல் !


என் இரு கைகளையும்
இணைத்துப் பார்க்கிறேன் !
இதய வடிவம் சரியாய்
வர மறுக்கிறது !
"அடப்போடா" என்று
கவலைப்படுவது காதல்!


 காமத்திற்கும் அன்பிற்கும் இடையில்
ஊர் வாயில் சிக்கித்
தவித்துக் கொண்டிருக்கும்
அத்தனையும் காதல் !
அது பாவம் !


நீ எனக்கானவள் இல்லை
என்ற போதும்
உன்மீது கொண்ட அன்பில்
நிலைத்தே இருப்பது
நிசமான காதல் !


உன்னைப் பெற்றவர்களிடம்:
" பூமியில் எங்கும் இலாத அன்பை
நான் மட்டுமே உங்கள் மகளுக்குக்
கொடுக்க முடிந்தவன்"
என்று சொல்லியே தீருவேன்
இந்த இனிமையான தலைகனத்தில்
நிறைந்திருப்பது
அத்தனையும் காதல் !
காதலுக்குள் அன்பு ! 



* நிறைவான காதலில்
நிறைந்திருப்பது காதல் !
நிறைவான காமத்திலும்
கலந்திருப்பது காதலே !



* உணர்வுகள் உணர்ச்சிகளை
அன்பால் கொல்கிறது !
அது காதல் !


* கலைந்து கிடக்கும் மேகக்
கூட்டங்களில்
ஹார்ட்டின்  சின்னங்களை
தேடுவது காதல் !



* ஒரு சராசரி ஆணாய்
உன் உடல் பிடிக்கும் !
ஏன் என்று கேள் !
என்னை சுமக்கிற
இதயத்தை சுமப்பது
உன் உடல் தானே ?!
அது காதல் !


என் கைகளில் உன் பெயரை எழுதிப்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!
உன் கைகளில் என் பெயரை
எழுதிக் கொண்டு சிரித்துக் கொண்டே
இருக்கிறாய் !
என் அன்பிற்குப் பெயர் காதல் !
உன் பைத்தியகாரத் தனத்திற்கும்
பெயர் காதலே!



* இருப்பது நினைவிலோ கனவிலோ ..
பேனா கிடைத்தால்
என்னை மறந்து உன் பெயரை
கிறுக்கி தள்ளுவது காதல் !



கறுப்புக் கலர் கைகளில்
ஒளிந்திருக்கும் அன்பையும் ஈரத்தையும்
வெள்ளைக் கலர் கைகள்
கண்டுபிடித்து ரசித்தால் !
அந்த விளையாட்டிற்கு
காதல் என்று பெயர் !



* நீ யாரென்றே தெரியாத போதிலும் கூட
உனக்காகநான் விடும்
ஒரே ஒரு சொட்டுக் கண்ணீரில்
ஓராயிரம் டன் அன்பு
ஒளிந்து கிடக்கும் ! 
அது காதல் !


 


* என் கால்களில் நீ
ஏறி நிற்க நினைப்பது காதல் !
இனிமையான சுமையைத் தாங்கி
நான் சிரித்துக் கொண்டிருப்பது
காதல் !


 

* நீ வேறு திசை நான் வேறு திசை
போன போதிலும்
நாம் நம் ஸ்வாசங்களுக்குள் சத்தம்போட்டு
முத்தமிட்டுக் கொள்வது காதல் !



உன் பெயரெழுதி பக்கத்தில்
என்பெயர் எழுதுவது
காதல் !
அதை அடித்துபோட்டுக் கிழித்துப்
போட்டதற்குப் பெயர்
வாழ்க்கை !


PENNED BY KARUR PRABHAKARAN



Sunday, February 6, 2011

64X காதல்


கவிதைகள் தூங்கிபோகிற நேரங்களில்
காதலும் என்னுள் தூங்கிப் போகிறது !

உயிர்கள் தூங்கிப் போகிற நேரங்களில்
உண்மையும் அதற்குள்ளே தூங்கிப் போவது 
என்ன நியாயம் ?

அப்ஜெக்ஷன் மை காதலி !

பட்டுப் போன என் உணர்வுகளுக்கு
பட்டாம்பூச்சி சிறகுகள் வேண்டும் !

விட்டுப்போன கவிதைகளை
ஒட்டுமொத்தமாய் எழுதி முடிக்க
ஒன்று செய் !

மறுபடியும் என்னை தம்பி என்றழை !
அங்கு தானே நம் காதல் தொடங்கியது !


Sunday, January 16, 2011

பூங்கதவே தாழ்திறவாய்

காதல் காதல் என்றெழுதிக்
கவிஞனானேன் !  
அன்பு அன்பென்று சொல்லி
மனிதனானேன் ! 

ஆசையின் வழி - அட்டகாசம் !
வெறித்துத் தவிர்த்தேன் !

அன்பிற்கு வழி - அடர்காடு !
விரும்பி நுழைந்தேன் !

கத்துவதும் கதறுவதும் 
கைநீட்டிக் கெஞ்சிக் கொண்டும்   
வந்து விட்டேன்...
பாதித் தொலைவு !
மீதிக் கவிதை எழுத நேரமில்லை... !
யாரேனும் என் 
கவிதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 
உங்கள் 
காதலிடம் கூட்டிச் செல்லுங்கள்  !!


Sunday, January 9, 2011

காதல் VS காமம் : The Exact Perspective :


உணர்த்த முடியாத அன்பினை 
உடல்கள் பேசிப் புரிந்துகொள்வது 
காமம் !
உணர்த்த முடிகிற அன்பினை 
இதழ்கள் பேசிப் புரிந்து கொள்வது 
காதல் !!
இதற்கு மேல் நான் என்ன சொல்ல ?

Saturday, December 4, 2010

காதல் நம்பர் : 123 ( One hundred and twenty third love )

KarurPrabha@anaathaikathalan


ஒரு தடவை தான் காதல் வரும்!
என்று எவன் சொன்னான் ? 

சேறு சகதிகளைக் கடந்து தான் 
ஆற்றுநீர் கடல் சென்று சேர்கிறது! 

சேற்றுக்குள்ளேயே சிக்கி 
இருப்பவர்களுக்குச் - சின்ன 
ஆற்றோடு முடிந்து விடுகிறது 
காதல்! 

ஆற்றைக் கடந்து அடியெடுத்து வை ! 
அன்புக் கடல் பெருசு நண்பா! 

ஆயிரம் வசனம் ஊருக்குத் தெரியும் 
அது பேசிக்கொண்டே தான் இருக்கும் ! 
விட்டுவிடு !

உன் வசனத்தை நீயே எழுது ! 
உன் வீணையை நீயே வாசி ! 

மற்றவரின் பேச்சுகளின் மேல் 
தூக்கி வைத்திருக்கிற 
உன் அன்பையும் காதலையும் 
இறக்கி வைத்து நீயே சுமந்து செல் !!  

எந்தத் தோளில் உன் அன்பை 
இறக்கி வைக்க முடியுமோ ! 
அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !! 

ஆயிரம் காதல் கூட தவறில்லை!! 
ஆசைக்கு ஏங்காமல் 
அன்பிற்கு ஏங்கும் வரை!

Tuesday, November 30, 2010

ஒரு கோப்பைக் காதல்

KarurPrabha @ anaadhaikathalan

என் ஒரு கோப்பை நெஞ்சிற்குள் 
உயிருக்கும் உணர்வுக்கும் 
உனக்கும் சண்டை !

உயிரையும் உணர்வையும் 
தூக்கி எறிந்து விட்டு 
கோப்பைக்குள் நிறைகிறாய் நீ ! 
 ஆம் ! எல்லாம் நீயாக ! 

போதும்! இது போதும்!
நீயே நெஞ்சான பின் 
இதற்கு மேல் என்ன எழுத ?

உயிரற்று உணர்வற்றுநான் 
ஒன்றுமேயற்றுப்  போனாலும் ,

உன்னை உணர எனக்குத் தெரியும்,
என்னை உணர உனக்குத் தெரியும் 
நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
இது பத்தாதாடி அழகி ??    

Thursday, November 25, 2010

காரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்


அப்ப  நான் உனக்கு புதுசு அழகி !
பழகிய கொஞ்ச நாட்களிலேயே
என் வரையரைற்ற அன்பிற்குக்
காரணம் கேட்டாய்  !

அப்போது கவிதையும் தெரியாதா எனக்கு ! 
எனவே
வார்த்தைகளையும் காரணத்தையும் 
தேட வேண்டி இருந்தது !

தேடியதும் சொன்னேன்!
"எங்கிருந்தோ வருகிற 
ஊர்பேர் தெரியாத காற்று 
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா 
உன்னை வாழ வைக்கிறது ? 
"நானும் காற்று தான் அழகி ! 



Thursday, November 11, 2010

கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்


தோழியின் மீது காதல் !
தொலைந்து போனது 
தாய்மொழி வார்த்தைகள் !

தொலைவில் அவள் 
சென்றிடக்கூடுமென்று  
மறைந்தே கிடக்கிறது 
மனதிற்குள் அன்பு !

 சொன்னால் விதி  
என்ன ஆகும் ? 
சொல்லாமல் என் அன்பு 
எங்கு போகும் ?

ஒளித்து வைப்பதும் குற்றம் ! 
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் ! 
எங்கு தான் போகும் 
அனாதையான அன்பு ?

யாரேனும் கடவுளைப் பார்த்தால் 
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக் 
கேள்வி கேட்கவேண்டும்!